வடுகந்தாங்கலில் நடந்த காளைவிடும் விழாவில் 13 பேர் காயம்
வடுகந்தாங்கலில் காளைவிடும் விழா நடந்தது. இதில் 13 பேர் காயமடைந்தனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் இ.பி.காலனி பகுதியில் காளைவிடும் விழா நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட 122 மாடுகளை வாடிவாசலில் இருந்து வரிசையாக விட்டனர். சப்-கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் ரவிச்சந்திரன், தாசில்தார் சரண்யா, துணை தாசில்தார் பலராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலாமார்க்கபந்து, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரசாமி, பாஸ்கர், பழனி, தவமணி, பிச்சாண்டி, அருள்காந்தி, வடுகந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் சேகுவேரா, கிராம நாட்டாண்மை தாரர்கள் நாகராஜ், நந்தகுமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.
முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.70 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி செய்து அனுப்பிவைக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்ட 2 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.