சென்றாய சுவாமி கோவிலில் தேரோட்டம்

சென்றாய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-19 11:30 GMT
நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோவிலில் 93-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் 7-ம் நாளன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்