சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.;
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசிதபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லிதாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் ஊர் கோவிலில் இருந்து கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்மர் பெரியமலைக்கு எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் பக்தோசிதப்பெருமாள் -அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அமிர்தவல்லி தாயார் சன்னதியில், பக்தோசித பெருமாள் திருப்பள்ளி நடைபெற்றது.