வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சிங்கப்பெருமாள் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 21). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் தங்கி ஒரகடம் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு மாட்டிக் கொண்டார். இதனை பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே மதன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.