ஹோலி கொண்டாட்டத்தில் வாலிபர் பலி

ஹோலி கொண்டாட்டத்தின் போது கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.

Update: 2022-03-19 11:21 GMT
கோப்பு படம்
அம்பர்நாத், 
ஹோலி கொண்டாட்டத்தின் போது கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
ஹோலி கொண்டாட்டம்
 தானே மாவட்டம் அம்பர்நாத் சிவாஜி நகரை சேர்ந்தவர் சூரஜ் மோரே (வயது28). இவர் அண்மையில் தான் புதிதாக இடம்மாறி அங்குள்ள கட்டிடத்தில் வசித்து வந்தார். அவருடன் மூத்த சகோதரர் துஷார் என்பவர்  வசித்து வந்தார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு சூரஜ் மோரே தான் வசித்து வந்த சாரதா சொசைட்டியில் வசித்து வந்த பழைய நண்பர்களை சந்திக்க சென்றார். அவருடன் துசாரும் சென்றிருந்தார். 
 அப்போது அவரது நண்பர்கள் சூரஜ் மோரேவிற்கு வண்ணம் பூச ஓடி வந்தனர். இதனை கண்ட அவரும், சகோதரர் துஷாரும் நண்பர்களிடம் இருந்து தப்பிக்க கட்டிடத்தின் மாடிப்படியில் ஏறி சென்றார்.
வாலிபர் பலி
 இதில் துஷார் முதல் மாடியில் பதுங்கி கொண்டார். மேலும் சூரஜ் மோரே கட்டிடத்தின் 4-வது மாடியான மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு நிலைதடுமாறிய அவர் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூரஜ் மோரே பலியானாார். 
 தகவல் அறிந்த சிவாஜி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்