வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் சோதனை 13 டன் பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.19½ லட்சம் அபராதம் வசூல்
வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் சென்னை மாநகராட்சி அதிரடி சோதனை நடத்தி 13 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்து உரிமையாளர்களிடமிருந்து ரூ.19½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் மார்ச் 17-ந்தேதி வரை 25 ஆயிரத்து 67 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 12.96 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 450 அபராதம் வசூலிக்கப்பட்டது.
எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.