பரத்வாஜ் சுவாமி, பஞ்சாக்கினி தவ வழிபாடு

பரத்வாஜ் சுவாமி, பஞ்சாக்கினி தவ வழிபாடு

Update: 2022-03-18 21:27 GMT
மதுரை
சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம்ஸ்ரீபரத்வாஜ் சுவாமி மதுரையில் தங்கி பல்வேறு பூஜைகள் செய்து வருகிறார். அவர் சில நாட்களுக்கு முன்பு ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் வேண்டி திருப்பரங்குன்றம் மலையில் தவ வழிபாடு நடத்தினார். பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதிக்கு அருகில் வைகை நதிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பூஜை செய்து வேண்டினார். இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், இயற்கையின் சீற்றம் தணியவும், தேச பக்தி வளர்ந்து அனைவரிடமும் சகோதரத்துவம் உண்டாகவும் பழங்காநத்தம் பகுதியில் பஞ்சாக்னி தவ வழிபாடு மேற்கொண்டார். அப்போது அவரை சுற்றி அக்னி வளர்த்து மகா வராகி சுவாமியை வேண்டி தியானம் செய்தார். அவர் தவம் இருந்ததை அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் அவரிடம் வந்து ஆசி பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்