வீரநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
வீரநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.;
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் என்று அழைக்கப்படும் மரகதவள்ளிதாயார் சமேத வீரநாராயணபெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரநாராயண பெருமாள், கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள், உபாயதாரர், பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் வீரநாராயண பெருமாள்- மரகதவள்ளி தாயார் திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.