ஹோலி கொண்டாடியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

ஹோலி கொண்டாடியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2022-03-18 21:15 GMT
விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் கொல்காரா தாலுகா தலேவாடி கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் அனுமந்த பீரப்பா வாலிகாரா (வயது 12). இந்த சிறுவன் நேற்று காலையில் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்றான். இதற்காக தலேவாடி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தண்ணீர் தொட்டியில் வண்ண, வண்ண பொடிகளை கலப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அந்த தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக குழாய் மற்றும் மின் மோட்டார் வைக்கப்பட்டு இருந்தது. மின் மோட்டாருக்கு பொருத்துவதற்காக வைத்திருந்த மின்சார வயர் அறுந்து கிடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தொட்டியில் தண்ணீர் எடுக்க சென்ற அனுமந்த பீரப்பா, அறுந்து கிடந்த வயரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவன் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். 

மேலும் செய்திகள்