பெரம்பலூர்:
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் கணிதவியல் துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மையத்தின் இயக்குனர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் பி.எஸ்.சீனுவாசன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே ரியல் அனாலிஸிஸ் என்ற தலைப்பில் பேசினார். மேலும் அவர் கணிதவியல் சூத்திரங்கள், பயன்பாடுகள், கணிதவியல் துறையின் முக்கியத்துவத்தை விளக்கினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கணிதவியல் துறை தலைவர் டாக்டர் ஜெசிந்தா வரவேற்றார். முடிவில் மாணவி வினோதா நன்றி கூறினார்.