பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்

அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-03-18 20:53 GMT
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேரோட்டம் 
அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) வெண்ணைத்தாழி நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. 
திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சாமி எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்