குட்டிவளவு முத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
மேச்சேரி அருகே மலையனூர் குட்டிவளவு முத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேச்சேரி:-
மேச்சேரி அருகே மலையனூர் குட்டிவளவு முத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. 9 மணிக்கு மலையனூர் கோவில் வீட்டில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், கணபதி பூஜை, வருண பூஜை, பூர்ணாகுதி ஆகியன நடந்தது. காலை 7.40 மணிக்கு மேல் காலை. 8.20 மணிக்குள் முத்து முனியப்பன் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) முதல் மண்டல பூஜை 24 நாட்கள் நடக்கிறது.