இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா
புளியங்குடி நகராட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நகர தலைவர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். மேலப்பள்ளிவாசல் தலைமை இமாம் கலீல் ரகுமான் ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் வகாப் வரவேற்று பேசினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினார்.
விழாவில் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய இணை செயலாளர் முகமது அல் அமீன், மாவட்ட துணைத்தலைவர் கலீல் ரகுமான், நகரச்செயலாளர் ஹபிபுல்லா, பொருளாளர் முகம்மது சுலைமான், மணிச்சுடர் ஷாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.