பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பாவூர்ச்திரத்தில் பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலி பறித்துச் சென்றார்.

Update: 2022-03-18 20:26 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அருணாசலகனி (வயது 36). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று இட்லி வாங்கிவிட்டு, வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
செல்வவிநாயகபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து இவரது வீட்டிற்கு செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். 2 பேரும் திடீரென அருணாசலகனி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அருணாசலகனி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்