சரக்கு வேனில் திடீர் தீ; அட்டை பெட்டிகள் எரிந்து நாசம்
காரியாபட்டி அருகே சரக்கு வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த அட்டை பெட்டிகள் எரிந்து நாசம் அடைந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சரக்கு வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த அட்டை பெட்டிகள் எரிந்து நாசம் அடைந்தது.
சரக்கு வேனில் திடீர் தீ
தூத்துக்குடி, சங்கர் காலனியைச் சேர்ந்தவர் மகாராஜா. டிரைவர். இவர் ஒரு சரக்கு வேனில் அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
காரியாபட்டி பைபாஸ் சாலையில் வந்த போது, திடீரென வண்டியின் கீழ் பகுதியிலிருந்து புகை வருவதை உணர்ந்த டிரைவர் மகாராஜா தனது வேனை நிறுத்தினார். பின்னர் வாகனத்தின் கீழ் பகுதியில் பார்த்த போது வண்டியில் இருக்கு புகை வருவதை பார்த்து மண்ணை போட்டு அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால் தீ திடீரென வாகனத்தின் பின்புறம் ஏற்றிய அட்டை மற்றும் வேன் டயர்களிலும் பற்றி எரிய ஆரம்பித்தது.
அட்டைகள் எரிந்து நாசம்
உடனே டிரைவர் மகாராஜா, காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சரக்கு வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வேனில் இருந்த அனைத்து அட்டைகளும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.