முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முனைஞ்சிப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டியை அடுத்த திருமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஈனமுத்து (வயது 75), விவசாயி. இவரது மனைவி இசக்கியம்மாள் (70). இவர்களுக்கு முத்துராஜ் (51) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஈனமுத்து தனது மகன் மற்றும் மனைவியிடம் கோபித்துக் கொண்டு தனியாக ஒரு வீட்டில் குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈனமுத்து நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.