பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 4 பவுன் சங்கிலிைய பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-18 19:37 GMT
திருச்சி, மார்ச்.19-
பெண்ணிடம் 4 பவுன் சங்கிலிைய பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
திருச்சி உறையூர் பாளையம்பஜாரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது27). இவர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 10-ந் தேதி சாமி கும்பிடுவதற்காக தனது மனைவியுடன் புத்தூர் மந்தைக்கு சென்று இருந்தார்.
 அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அவருடைய மனைவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம ஆசாமி பறித்து சென்றுவிட்டார். இது குறித்து லட்சுமி நாராயணன் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்