பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
ராமநத்தம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தீவிர ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது கருவேலம் காட்டில் பணம்வைத்து சூதாடிக்கொண்டிருந்த மங்களூரைச் சேர்ந்த பழனிமுத்து மகன் ராமலிங்கம்(வயது 48), பாவாடை(40), குமார்(38), லக்கூர் சின்னசாமி மகன் கோவிந்தசாமி(36), மா.புடையூர் ராயர் மகன் செந்தில்குமார்(38), சஞ்சீவ் மகன் கலியபெருமாள்(67) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.