பட்டாசு ஆலையில் திடீர் தீ

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-03-18 19:28 GMT
விருதுநகர், 

விருதுநகர் அருகே கோவில் வீரார்பட்டியில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பின்பு பட்டாசு ஆலையின் வெளியே பட்டாசு கழிவுகள் எரிக்கப்பட்டது.அப்போது அதில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஆலையின் உள்ளே கருந்திரி வைத்திருந்த அறையில் விழுந்து வெடித்தன. இதனால் அந்த அறையில் இருந்த கருந்திரி முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். நல்ல வேளையாக பணியாளர்கள் வேலை முடிந்து சென்ற பின்பு இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.

மேலும் செய்திகள்