தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டு

சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருடப்பட்டது.;

Update:2022-03-19 00:47 IST
சிவகாசி, 

சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த  குருசாமி மகன் அய்யாத்துரை (வயது44). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் விருதுநகர் அருகில் உள்ள வில்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக வீட்டின் அருகில் வசித்து வருபவர்கள் அய்யாத்துரைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அய்யாத்துரை இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்