விழிப்புணர்வு ஊர்வலம்

மணமேல்குடி ஒன்றியத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-03-18 19:08 GMT
மணமேல்குடி, 
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம் மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்றது. இதனை மணமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா கவுரி தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் மணமேல்குடி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, மணமேல்குடி கடைத்தெரு வழியாக மீண்டும் தொடக்கப்பள்ளிக்கு வந்தடைந்தது. இதில், கலந்து கொண்ட மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் முத்துராமன், வேல்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்