10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

மாட்டுக்கொட்டகையில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2022-03-18 18:48 GMT
அன்னவாசல், 
இலுப்பூர் அருகே உள்ள தளுஞ்சி மேலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் 10 அடிநீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

மேலும் செய்திகள்