கரூரில் கொரோனா தொற்று இல்லை
கரூரில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை;
கரூர்,
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து, கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டம் உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.