அம்மா மினி கிளினிக் மருத்துவ அலுவலர்கள் பணி பாதுகாப்பு கோரி ஊர்வலம்

அம்மா மினி கிளினிக் மருத்துவ அலுவலர்கள் பணி பாதுகாப்பு கோரி ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-03-18 18:10 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அம்மா கிளினிக் மருத்துவ அலுவலர்கள் பணி பாதுகாப்பு கோரி கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தினர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கிய ஊர்வலம் மாவட்ட துணை சுகாதார இயக்குநர் அலுவகம் வரை சென்றடைந்தது.

இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவராகிய நாங்கள் தமிழக அரசுடன் இணைந்து பகல், இரவு பாராமல் சிவப்பு மண்டலப் பகுதிகளிலும் உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்துள்ளோம். நமது மாவட்டத்தில் நடைபெற்ற நேர்முக தேர்வில் மதிப்பெண், இடஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட்டோம்.
இந்தநிலையில், தமிழக அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் மார்ச் 31-ந்் தேதி முதல் பணி நீக்கம் என தெரிவித்துள்ளது. எனவே பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்துவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்