ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தேங்காய் வியாபாரி சாவு

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி தேங்காய் வியாபாரி இறந்தார்.

Update: 2022-03-18 18:09 GMT
ஊத்தங்கரை,:
ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் அப்பு (வயது22). தேங்காய் வியாபாரி. இவர் தேங்காய்களை இருப்பு வைப்பதற்காக அங்கு தற்காலிக கொட்டகை அமைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு  கொட்டகைக்கு லைட் போடுவதற்காக மின் இணைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்த இரும்பு குழாயை தூக்கியபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் குழாய் மோதியது. இதில் மின்சாரம் தாக்கி அப்பு தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்