கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடபபட்டது.
கிருஷ்ணகிரி:
வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஹோலி பண்டிகை ஒன்றாகும். இந்த ஆண்டு ஹோலி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலரும் தொழில் நிமித்தமாக தங்கி இருக்கிறார்கள். அவர்கள் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். இதையொட்டி நேற்று அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். மேலும் உடலில் வண்ண வண்ண பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். அவர்கள் வண்ண பொடிகளால் ஆன தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து மகிழ்ந்தனர். மேலும் பாங்கு எனப்படும் பானத்தை இளைஞர்கள் பலரும் குடித்து மகிழ்ந்தனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்திருந்தனர்.
இதேபோல் தேன்கனிக்கோட்டையில் வடமாநில இளைஞர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினர்.