பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு வாலிபரை கடத்திய பூ வியாபாரி கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை கடத்திய பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பூக்கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராமலிங்கத்திடம் கிருஷ்ணமூர்த்தி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த பணத்தை திருப்பி தராததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்தை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்து ராமலிங்கம் தன்னை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்று அடைத்து வைத்ததாகவும், போலீசார் தேடுவதை அறிந்ததும் தன்னை விடுவித்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.