மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியானார்.;

Update: 2022-03-18 18:07 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்துள்ள ஆவட்டி தனியார் வேளாண்மை கல்லூரி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார்.உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்