திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலைமருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 80 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டிபந்தயம், நடுமாடு வண்டி பந்தயம், சின்ன மாடு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி என 4 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கிடாரிப்பட்டி முருகேசன் வண்டியும், 2-வது பரிசை ரெத்தினக்கோட்டை அடைக்கலம் காத்த அய்யனார் வண்டியும், 3-வது பரிசை கோம்மை ராமையா வண்டியும், 4-வது பரிசை அழகாபுரி சோலைச்சாமி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2- வது பரிசை நாகப்பன்பட்டி கிரிகரீஸ்சேகர் வண்டியும், 3-வது பரிசை வல்லாளப்பட்டி பேரூராட்சி தலைவர் குமரன் வண்டியும், 4-வது பரிசை மதகுபட்டி சிவானி வண்டியும் பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஏரியூர் விஜயவேல் 2-வது பரிசை வல்லாளப்பட்டி பொன்னம்மாள், 3-வது பரிசை பாகனேரி சின்னதிருஞானம், 4-வது பரிசை சின்னமனூர் லிங்கேஸ்வரன் வண்டியும் பெற்றன. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 34 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றன. முதல் பிரிவில் முதல் பரிசை கோம்பை நவாப்கண்ணன், 2-வது பரிசை புதுசுக்காம்பட்டி சின்ன கருப்பு, 3-வது பரிசை குண்டேந்தல்பட்டி சுப்பு, 4-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேல்வாக்கோட்டை துரைச்சாமி வண்டியும், 2-வது பரிசை திருவாதவூர் பதினெட்டான்படியான், 3-வது பரிசை மாத்தூர் பேச்சியம்மன், 4-வது பரிசை கொண்ணப் பட்டி முத்துபிடாரி அம்மன் வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.