சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
செஞ்சியில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
செஞ்சி,
செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் நாயகம் வரவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் செஞ்சி பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி செயல் மணி, டாக்டர் யோகபிரியா, மாவட்ட வழக்கறிஞர் அணி மணிவண்ணன், கவுன்சிலர்கள் சீனிவாசன், கார்த்திக், லட்சுமி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் அன்புசெல்வன், பள்ளி ஆய்வாளர் விநாயகமூர்த்தி, தொண்டரணி பாஷா, ராம்குமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அய்யாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி நன்றி கூறினார்.