சங்கராபுரத்தில் ஏழை பெண்களுக்கு ஆடுகள்

சங்கராபுரத்தில் ஏழை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-03-18 17:46 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் கால்நடை மருந்தக அலுவலக வளாகத்தில் ஏழை பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனா் டாக்டர் பெரியசாமி தலைமை தாங்கினாா். கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, அசோக்குமாா், கோபி, துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாக்டர் முருகு வரவேற்றார். 

இதில் ஏழை பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்