சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி பெருவிழா
108 திவ்யதேசங்களில் 19-வது திவ்யதேசமாக நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக சவுந்தரராஜ பெருமாள், உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோவிந்தா!..,கோவிந்தா!.. என பக்தி கோஷங்கள் எழுப்பினர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது. இதற்கான பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.