சங்கராபுரம் அருகே தேரோட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்
சங்கராபுரம் அருகே தேரோட்டத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ரங்கப்பனூர் கிராமம். இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த ஒரு அரசியல் கட்சியினர், தேரை நாங்கள் தான் இழுப்போம் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், வழக்கம்போல் அனைவரும் ஒன்று சேர்ந்து விழாவை நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் உருவானது.
இதுபற்றி தகவல் அறிந்த கோட்டாட்சியர் சரவணன் இருதரப்பனரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து வழக்கம்போல் இழுக்கப்படும் தேரை இழுத்துச் செல்லுங்கள் என இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இருப்பினும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.