கண்டமங்கலம் அருகே உள்ள கலிதீர்த்தால்குப்பம் கிராமத்தில் இருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று தாழனூர் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. ஏமப்பூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.