அரூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி
அரூர் பகுதியில் விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி
அரூர்:
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் தற்போது 27 கிலோ ஒரு பெட்டி தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறையாக ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போதிய விலை இல்லாததால் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அரூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் தற்போது மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரங்களில் தக்காளியை கொட்டி செல்கின்றனர். சிலர் மீன்களுக்கு உணவாக பயன்படுத்தி வருகின்றனர். பலர் தக்காளியை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே அழுகி வருகிறது. இதனால் அரூர் பகுதியில் தக்காளி சேமிப்பு கிடங்கு அமைத்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.