உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

உரக்கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

Update: 2022-03-18 17:12 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு தனியார் உர விற்பனை நிலையங்களில் மற்றும் பாப்பிநாயக்கனஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா தலைமையில் வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), தாம்சன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, வேளாண்மை அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்யப்படுகிறதா?, உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். 

மேலும் செய்திகள்