பாலக்கோடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 12 வீடுகள் இடித்து அகற்றம்
பாலக்கோடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 12 வீடுகள் இடித்து அகற்றம்
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த மேக்கலாம்பட்டி ஏரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் திவ்யதர்சினி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், மேலாளர் கந்தப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, தாசில்தார் பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் நீர்நிலைகளில் இருந்த 12 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.