கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
மொரப்பூர்:
கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஓபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சியில் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுமான பணியை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மடதஅள்ளியில் ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கட்டுமான பணியை ஆய்வு செய்த கலெக்டர், மடதஅள்ளி நாடார்புரம் வேடியப்பன் கோவில் முதல் கணவாய்க்குட்டை வரை ரூ.17.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணியை ஆய்வு செய்தார். இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி உதவி இயக்குனர் முரளிகண்ணன், மொரப்பூர் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெகதீஷ்குமார், சிறு பாலங்கள் மற்றும் சாலைகள் துறை உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலிங்கம், ரேணுகா ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், சுமதி தங்கராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.