தேன்கனிக்கோட்டையில் லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா
தேன்கனிக்கோட்டையில் லட்சுமி நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் பழமை வாய்ந்த கவி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இஸ்கான் கீர்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி அமர வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இருந்து நிலை சேர்த்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.