தர்மபுரியில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
தர்மபுரியில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
தர்மபுரி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தர்மபுரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா தலைமை தாங்கினார். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், உதவி பேராசிரியர்கள் அருண் வீரண்ணன், தங்கதுரை ஆகியோர் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். கள அலுவலர் அப்துல்லா, குருணை யூரியாவிற்கு பதில் நானோ யூரியா பயன்பாடு குறித்து விளக்கினார். வேளாண் துறையில் மத்திய, மாநில அரசு திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து வேளாண் துணை இயக்குனர்கள் முகமது அஸ்லாம், ஜெயபாலன் ஆகியோர் விளக்கினார்கள். தரக்கட்டுப்பாட்டு திட்டங்களில் முன்னேற்ற நிலை குறித்து தரக்கட்டுப்பாட்டு வேளாண் உதவி இயக்குனர் தாம்சன் விளக்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் துணை வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.