கூடைப்பந்து அணி வீரர்களுக்கு பாராட்டு

மாநில போட்டிக்கு தகுதியான தேனி மாவட்ட கூடைப்பந்து அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-03-18 17:00 GMT
தேனி: 

மதுரை மண்டல அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் நாகர்கோவிலில் கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் தேனி மாவட்ட கூடைப்பந்து அணி கலந்துகொண்டு 2-வது இடம் பெற்றது. இதன் மூலம் இந்த அணி, தூத்துக்குடியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்த அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தேனி எல்.எஸ். மில்ஸ் வளாகத்தில் நடந்தது. இதில், தேனி எல்.எஸ். மில்ஸ் நிர்வாக இயக்குனர் எல்.எஸ்.மணிவண்ணன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் அஸ்வின் நந்தா ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். மேலும், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை எல்.எஸ்.மில்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்