வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
கச்சிராயபாளையம் அருகே உள்ள க.அம்பலம் காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர், கடந்த 1-12-2008 அன்று அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கேரள மாநிலம் கண்ணூரில் குடும்பம் நடத்தி வந்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று செந்திலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட செந்திலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.