பள்ளிபாளையம் அருகே கார் மீது லாரி மோதி பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
பள்ளிபாளையம் அருகே கார் மீது லாரி மோதி பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் பலி
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே கார் மீது லாரி ேமாதி பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பேக்கரி உரிமையாளர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை இறையமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் விட்டம்பாளையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருடைய பேக்கரியில் சிவகாசியை சேர்ந்த தங்கராஜ் (35) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் ஒரு காரில் இறையமங்கலத்தில் இருந்து விட்டம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் அருகே பெரும்பாளையம் புதூர் அருகே சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது பயங்கரமாக மோதியது.
சோகம்
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கண்ணன், தங்கராஜ் ஆகியோர் இடிபாடுகளிவல் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் கண்ணனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், தங்கராசுவை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
ஆனால் கண்ணன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். தங்கராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.