ஊட்டி குன்னூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி குன்னூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-18 16:49 GMT
ஊட்டி

கர்நாடக மாநில பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை  கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் சபிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

குன்னூரில்  நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் உமர் தலைமை தாங்கினார். பொருளாளர் ஹக்கிம் முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹிஜாப் அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

மேலும் செய்திகள்