கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலையில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து 11 மணிக்கு முருகப் பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகப்பெருமான் வீற்றிருந்து, கோவிலை 3 முறை வலம் வரும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் தேரை தோளில் சுமந்தவாறு வலம் வந்தனர்.
இதையடுத்து முருகக் கடவுளுக்கு, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல கோத்தகிரி அருகே உள்ள நட்டக்கல் முருகன் கோவில், தங்கமலை முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.