ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1,000 துரான்டா மலர் செடிகளை வாங்கி கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அனுப்பி வைத்தார்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1,000 துரான்டா மலர் செடிகளை வாங்கி கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அனுப்பி வைத்தார்
கோவை
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் கலெக்டர் தனது மனைவியுடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அவர் கொரோனா குணம் அடைந்ததும் மீண்டும் ஊட்டிக்கு திரும்பினார். கலெக்டர் மற்றும் அவருடைய மனைவிக்கு அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் தொற்றால் பாதித்த தனக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்த கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளை கலெக்டர் அம்ரித் கவுரவிக்க விரும்பினார்.
இதற்காக அவர், மரக்கன்று வழங்கி அந்த ஆஸ்பத்திரி வளாகத்தை பசுமை வனமாக மாற்ற முடிவு செய்தார்.
அதன்படி நீலகிரியில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1,000 துரான்டா மலர் செடிகளை வாங்கி கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து டாக்டர்களையும், செவிலியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
அந்த மலர் செடிகள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் நடப்பட்டன.