பால்குடம், காவடியுடன் பக்தர்கள் ஊர்வலம்
முதுகுளத்தூரில் பால்குடம், காவடியுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் வடக்கூர் வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நேற்று அதிகாலை முதல் வடக்கூர் வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி, காவடி, பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் முதுகுளத்தூர் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை வழிவிடும் முருகன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.