ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வார்டு உறுப்பினர்கள் 4 பேர் நேற்று மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வார்டு உறுப்பினர்கள் 4 பேர் நேற்று மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-03-18 14:49 GMT

பேரூர்

கோவையை அடுத்த பேரூர் அருகே மத்வராயபுரம் ஊராட்சி உள்ளது. இந்த, ஊராட்சியில் போதிய நிதி இருந்தும், வளர்ச்சி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும், 

மன்ற கூட்டங்கள் முறைப்படி நடத்தாதது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், முருகேசன், விநாயகமூர்த்தி, ராணி ஆகிய 4 பேர் ஊராட்சிகளின் உதவி இயக்குனர், திட்ட இயக்குனர் ஆகியோரிடம் நேரில் புகார் மனு கொடுத்தனர். 

மேலும், மாவட்ட கலெக்டருக்கும் பதிவுத் தபால் மூலமும் புகார் மனு அனுப்பினர்.

இந்நிலையில், வளர்ச்சிப்பணி செய்ய வில்லை என்று கூறி, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வார்டு உறுப்பினர்கள் 4 பேர் நேற்று மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள், ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை கண்டித்தும் கோஷமிட்டனர்.

உடனே அவர்களிடம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை ஏற்று வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்