தடுப்புகள் அகற்றப்படாததால் மாணவர்கள் அவதி

வாக்கு எண்ணிக்கையின்போது வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்படாததால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-03-18 14:27 GMT
பரமக்குடி, 
பரமக்குடி நகராட்சி தேர்தல் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி ஆகிய பேரூராட்சி களுக்கான தேர்தல் முடிந்து அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 21-ந் தேதி பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக அரசு கல்லூரியில் நடந்தது. அதற்காக அந்த கல்லூரியின் நுழைவாயில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்தனர். மேலும் கல்லூரியை சுற்றிலும் இரும்பு தகரத்தால் தடுத்தும் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்து 25 நாட்களுக்கு மேலாகியும் அங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளும், அடைப்பு களும் இதுவரை அகற்றப்படாமல் ஆங்காங்கே கேட்பாரற்று  கிடக்கிறது. இதனால் கல்லூரிக்கு வரும் பேராசிரியர்களும், மாணவ -மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த தடுப்பு வேலிகளில் இடறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்