அனுப்பர்பாளையம்:
திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ரூ.81 கோடியே 34 லட்சம் மதிப்பில், இ.எஸ்.ஐ.,மருத்துவமனை கட்டும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தரைதளத்துடன் சேர்த்து மொத்தம் 3 தளங்களில், 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை, மருத்துவ பணியாளர்களுக்காக தங்க 32 குடியிருப்பு கட்டப்படுகின்றன. தார் சாலை, குடிநீர், கேன்டீன் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது உதவி பொறியாளர் ராஜா, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது அ.தி.மு.க.பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், ஹரிகரசுதன், கவுன்சிலர் தனலட்சுமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜா, வார்டு செயலாளர் ராமசாமி, அ.தி.மு.க. நிர்வாகி ரகுபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.